போலீஸ் ஸ்டேஷனில் பணப்பட்டுவாடா; திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் இடமாற்றம்

 

போலீஸ் ஸ்டேஷனில் பணப்பட்டுவாடா; திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் இடமாற்றம்

காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரில் திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் பணப்பட்டுவாடாவும் ஆரம்பித்து விட்டது. திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில், காவலர்களின் பெயர்களுடனேயே பண கவர்கள் கொடுக்கப்பட்டது தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் உறுதியானது. காவல்நிலையத்தில் பதவிக்கு ஏற்றாற்போல ரூ.2000 முதல் 10 ஆயிரம் வரை பணம் வழங்கப்பட்டது. அரசியல் கட்சிகளிடம் இருந்து பணத்தை வாங்கிய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

போலீஸ் ஸ்டேஷனில் பணப்பட்டுவாடா; திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் இடமாற்றம்

இந்நிலையில் திருச்சி காவல் ஆணையர் லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி மேற்கு தொகுதியில் காவல்நிலையங்களில் பணப்பட்டுவாடா நடந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பணியில் மெத்தனமாக இருந்ததாக திருச்சி பொன்மலை சரக உதவி ஆணையர் தமிழ்மாறனை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.