திருச்சி- 12 லட்சத்தில் புதுப்பிக்கப்படும் பெரியார் முழு உருவ சிலை! கே.என்.நேரு. ஆய்வு

 

திருச்சி- 12 லட்சத்தில் புதுப்பிக்கப்படும் பெரியார் முழு உருவ சிலை! கே.என்.நேரு. ஆய்வு

திருச்சியில் உள்ள தந்தை பெரியார் முழு உருவ சிலை ரூபாய் 12 லட்சத்தில் புதிப்பிக்கப்பட்டு வருவதை திமுக முதன்மை செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே. என். நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி- 12 லட்சத்தில் புதுப்பிக்கப்படும் பெரியார் முழு உருவ சிலை! கே.என்.நேரு. ஆய்வு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முக்கியத்துவம் வாய்ந்தது . அந்த சிலையை தந்தை பெரியார் உயிரோடு இருக்கும்போது அன்றைய முதல்வராக இருந்த கல்வி வள்ளல் காமராஜர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் , குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்று திறந்து வைக்கப்பட்ட சிலையாகும்.

திருச்சி- 12 லட்சத்தில் புதுப்பிக்கப்படும் பெரியார் முழு உருவ சிலை! கே.என்.நேரு. ஆய்வு

சிலையை சுற்றி உள்ள பீடம் பேருந்துகளில் இடிக்கப்பட்டு சிதிலமடைந்து கிடந்தது அதனை கண்ட முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.என் நேரு முயற்சியில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர்- 17 பெரியாரின் 142 -வது பிறந்த நாள் என்பதால் இப்பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

திருச்சி- 12 லட்சத்தில் புதுப்பிக்கப்படும் பெரியார் முழு உருவ சிலை! கே.என்.நேரு. ஆய்வு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலை ரூ.12 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்படும் பணியை கழக முதன்மை செயலாளர் கே.என். நேரு இன்று பார்வையிட்டார். உடன் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் மு.அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், இளங்கோ மண்டிசேகர், உட்பட பலர் உடன் இருந்தனர்.