திருச்சி பங்குனி வாய்க்கால் விவகாரம் : குறுவை,சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை

 

திருச்சி பங்குனி வாய்க்கால் விவகாரம் : குறுவை,சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை


        முக்கொம்பு காவிரி ஆற்றிலிருந்து புள்ளம்பாடி வாய்க்கால் இடது கரையில் பங்குனி வாய்கால் தலைப்பு உருவாகிறது. இந்த பங்குனி ஆற்றில் வரும் தண்ணீர் முசிறி
வடகரை வாய்க்கால் வடிகால் நீர் மற்றும் கொல்லிமலை மழை தண்ணீர் அய்யாற்றில் கலந்தும், பெருவளை வாய்க்கால் வடிகால் தண்ணீர் ஆகியவை இந்த பங்குனி வாய்க்காலில் கலக்கிறது.

திருச்சி பங்குனி வாய்க்கால் விவகாரம் : குறுவை,சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை


இந்த பங்குனி ஆற்றில் வரும் தண்ணீர் பல்வேறு வாய்க்கால்களில் இருந்து வீணாக வெளியேறும் வடிகால் தண்ணீர் தான் பங்குனி ஆறாக விளங்குகிறது.  இந்த பங்குனி ஆறு திருச்சி முக்கொம்பு காவிரி மேலணை வாத்தலையிலிருந்து, சிறுகாம்பூர், பாச்சூர், அத்தானி, வாளாடி உள்ளிட்ட கிராமங்களை கடந்து  லால்குடி அருகேயுள்ள திருமங்கலம் அணைக் கட்டு வரை சுமார் 17 மைல் தூரம் வரும் ஆறு மேலபங்குனி ஆறு எனவும், திருமங்கலம் அணைக்கட்டிலிருந்து அகலங்கநல்லூர்,  பூவாளூர், பின்னவாசல், காட்டூர், கொத்தமங்கலம், செம்பரை, மேட்டுப்பட்டி ஆலங்குடிமகாஜானம் ஏரி வரை சுமார் 8 மைல் தூரம் செல்லும் ஆறு கீழ்பங்குனியாக விளங்குகிறது.  இந்த பங்குனி ஆறு நத்தம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் வடிகாலாக கலக்கிறது.

திருச்சி பங்குனி வாய்க்கால் விவகாரம் : குறுவை,சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை

        முக்கொம்பு மேலணைப் பகுதியில்  இரவு பெய்த கனமழை 136.8  மில்லி மீட்டம் மழை அளவு பதிவானது. இதனால் இப் பகுதியில் உள்ள பெருவளை, அய்யன், புள்ளம்பாடி, மற்றும் பங்குனி ஆகிய ஆறுகளில் அதிகளவு தண்ணீர் சென்றது. இதனால் பங்குனி ஆற்றில் பிற பகுதிகளிலிருந்து வந்த மழை நீர் அதிகளவு தண்ணீர் கலந்ததால் பாச்சூர் பகுதியில்  இருந்த கரைகள் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.  இந்த உடைப்பு ஏற்பட்டதால், பங்குனி ஆற்றின் நீர் இருபுறங்களில் பயிரிட்டுள்ள குறுவை நெல் சாகுபடி செய்த நெல் பயிர் மற்றும் சம்பா நெல் நடவுக்காக நாற்றாங்களில் நெல் விதைப்பு செய்திருந்த நெல் விதைகளும் நீரில் மூழ்கின.
        இது குறித்து அப்பகுதி விவசாயிகள் நம்மிடம் பேசியபோது,

திருச்சி பங்குனி வாய்க்கால் விவகாரம் : குறுவை,சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை

‘’ இப் பகுதியில் பங்குனி வாய்கால் கடந்த 3 ஆண்டுகளாக தூர்வாராததால், ஆற்றில் செடி கொடிகள் அதிகளவில் மண்டியுள்ளது. அது மட்டுமல்லாது ஆற்றின் இருகரைகளும் போதிய அளவில் பலப்படுத்தாததால் பாச்சூர் பகுதியில் மட்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் சம்பா நெல் நடவுக்காக நாற்றாங்களில் நெல் விதைப்பு செய்திருந்த நெல் விதைகளும் நீரில் மூழ்கியுள்ளது, விரைவில் தண்ணீர் வடியவில்லை எனில் நாற்றாங்களில் தெளித்த  நெல் விதைகள் அழுகி விடும் நிலை ஏற்படும்’’ என்றனர்.
      இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நாம் கேட்ட போது,  ’’பங்குனி வாய்க்கால் மற்றும் பெருவளை வாய்க்காலில் திறந்து விட்ட தண்ணீரை முற்றிலுமாக அடைத்து விட்டதால்  உடைப்பு பகுதியிலிருந்து வயலில் உட்புகும் நீர் விரைவில் வெளியேறும்’’ என்கிறார்கள்.