திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் செந்தில் கைது!

திருச்சி 9ஆம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் நேற்று மதியம் மர்ம நபர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். சோமரசம்பேட்டை போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கங்காதேவியின் உடல் முட்புதரில் கிடப்பதாக முதலில் உறவினர்கள் செந்தில் மற்றும் சசிகுமார் ஆகியோர் கூறியுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அண்ணன் முறையான செந்திலுக்கும் கங்காதேவிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் செந்தில் தனது நெஞ்சில் கங்காதேவியின் பெயரை பச்சை குத்தியிருக்கிறார். அவருடன் கங்காதேவி நீண்ட நாட்களாக செல்போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அப்போது, கங்கா தேவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த வழக்கில் சிறுமியின் உறவினர் செந்தில் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Most Popular

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...

கடல்சீற்றத்தால் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை பி கிராமத்தில் கடந்த 8.8.2020 அன்று கடல் சீற்றத்தினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் மரியதாஸ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து,...