திருச்சி காந்தி மார்க்கெட் அதிரடி மூடல்… வெளியானது அதிரடி உத்தரவு!

 

திருச்சி காந்தி மார்க்கெட் அதிரடி மூடல்… வெளியானது அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் இரண்டு நாட்களில் ஊரடங்கை முறையாக கடைப்பிடித்த மக்கள், கடந்த 4 நாட்களாக ஊரடங்கை மதிக்காமல் பொது வெளியில் சுற்றித் திரிகின்றனர். அந்த வகையில், திருச்சி காந்தி மார்க்கெட்டில் உத்தரவுகளை மீறி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

திருச்சி காந்தி மார்க்கெட் அதிரடி மூடல்… வெளியானது அதிரடி உத்தரவு!

போக்குவரத்திற்கு இடையூறாகவும் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்தும் வியாபாரிகள் கூட்டத்தைக் கூட்டி விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனால், நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து தெருவோர கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் அனைத்தையும் அதிரடியாக அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட் அதிரடி மூடல்... வெளியானது அதிரடி உத்தரவு!

இந்த நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மறு உத்தரவு வரும் வரை காய்கறி மொத்த, சில்லறை விற்பனை நிறுத்தப்படுவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பற்றி கண்டுகொள்ளாமல் மக்கள் அதிக அளவில் கூடியதால் திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்படுவதாகவும் மறு உத்தரவு வரும் வரை வியாபாரம் நிறுத்தப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலப்புலிவார்டு ரோடு காமராஜர் வளைவு முதல் வெல்லமண்டி சாலை சந்திப்பு வரை காய்கறிகள் விற்பனை நடைபெறும் என்றும் கீழ்ப்புறத்தில் மொத்த வணிகமும் மேலபுறத்தில் சில்லரை வணிகமும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.