வேளாண் சட்டங்களை கண்டித்து, எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை கண்டித்து, எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்

திருச்சி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து, திருச்சியில் எலிக்கறி சாப்பிடும் நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க சென்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து, எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தம்மையும் நிர்வாகிகளையும் டெல்லி செல்ல அனுமதிக்க கோரியும் திருச்சி புறவழிச்சாலை அருகே அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், தங்களது வாயில் எலிகளை வைத்து கடித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் இனி எலி கறியை தான் சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து, எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்

போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, தங்களை டெல்லி செல்ல போலீசார் அனுமதி வழங்காவிட்டால், அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்வதாக அவர் தெரிவித்தார்.