வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு

 

வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு

திருச்சி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்த, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை போலீசார் வீட்டுக்காவலில் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டுமென, திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும், இதனை வலியுறுத்தும் விதமாக, வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் டெல்லியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மொட்டையடித்து, போராட்டத்தில் ஈடுபட போவதாக, அதன் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு

இதற்காக விவசாயிகள் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் டெல்லி போராட்டத்திற்கு செல்வதை தடுக்கும் விதமாக, நேற்றிரவு திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அய்யாக்கண்ணு வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டனர். இதனால், அவர் டெல்லி போராட்டத்திற்கு செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.