திருச்சியில் வேளாண் சட்டங்களை கண்டித்து திமுக, சிபிஎம் ஆர்ப்பாட்டம்

 

திருச்சியில் வேளாண் சட்டங்களை கண்டித்து திமுக, சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போராட்டம் தொடர்பாக திமுக எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட ஆயிரத்துககும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சியில் வேளாண் சட்டங்களை கண்டித்து திமுக, சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறவும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி, செளந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டிகளில் வந்திருந்த திமுக தொண்டர்கள் மத்திய அரசை கண்டித்தும், சட்டம் நிறைவேற துணை புரிந்த அதிமுக அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே, கொரோனா ஊரடங்கு காலத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 1250 பேர் மீது கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்..

திருச்சியில் வேளாண் சட்டங்களை கண்டித்து திமுக, சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இதேபோல், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முகமது அலி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.

திருச்சியில் வேளாண் சட்டங்களை கண்டித்து திமுக, சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.