“நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்” – ஆட்சியர் சிவராசு

 

“நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்” – ஆட்சியர் சிவராசு

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் சிவராசு ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிவர் புயல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் கனமழைக்கு மட்டும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால்

“நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்” – ஆட்சியர் சிவராசு

தங்குமிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். மேலும், காற்றின் வேகம் அதிகரித்தால், மின் விநியோகம் நிறுத்தப்படும் என கூறிய அவர், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். திருச்சி மாவட்டத்தில் 154 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இவற்றில் 3 இடங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படும் இடங்களாக கருதப்பட்டு, அங்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், திருச்சி மாவட்டத்தில் ஏரி, குளங்கள் 35 சதவீதம் நிரம்பி உள்ளதாகவும் அவர் கூறினார்.