திருச்சி- பயிற்சி காவலர்களுக்கு சிலம்பம் கற்பித்த டி.ஐ.ஜி ஆனிவிஜயா

 

திருச்சி- பயிற்சி காவலர்களுக்கு சிலம்பம் கற்பித்த டி.ஐ.ஜி ஆனிவிஜயா

திருச்சி

இளம் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பயிற்றுவித்து, திருச்சி சரக டி.ஐ.ஜி., ஆனி விஜயா அசத்தி வருகிறார். திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் ஆனிவிஜயா தொடர்ந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருவதோடு, பயிற்சியில் உள்ள இளம் காவல்துறையினருக்கு முன்மாதிரியாகவும் செயல்பட்டு வருகிறார்.

திருச்சி- பயிற்சி காவலர்களுக்கு சிலம்பம் கற்பித்த டி.ஐ.ஜி ஆனிவிஜயா

இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்
பயிற்சி பெற்று வரும், பயிற்சி காவலர்களுக்கு சிலம்பம், தீப்பந்தம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய பயிற்சிகளை ஆனிவிஜயா வழங்கினார்.

திருச்சி- பயிற்சி காவலர்களுக்கு சிலம்பம் கற்பித்த டி.ஐ.ஜி ஆனிவிஜயா

பயிற்சி வகுப்பில் கம்பை சுழற்றி சிலம்ப பயிற்சியை காவலர்களுக்கு விளக்கியதோடு, தீப்பந்ததை வளைத்து சுழற்றி அசத்தினார்.

திருச்சி- பயிற்சி காவலர்களுக்கு சிலம்பம் கற்பித்த டி.ஐ.ஜி ஆனிவிஜயா

இதுபோன்ற பயிற்சிகளின் மூலம் காவலர்களின் மனஅழுத்தம் குறைவதை தாண்டி, தமிழர் கலைகளை காவல்துறையினரிடம் கொண்டு சேர்ப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.