பி.டி. உஷாவையே ஓவர்டேக் செய்த ‘தங்கத்தமிழ்’ மங்கை ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றார்!

 

பி.டி. உஷாவையே ஓவர்டேக் செய்த ‘தங்கத்தமிழ்’ மங்கை ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றார்!

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் இந்த மாதம் ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தடகளப் போட்டிகளுக்கான தகுதிச்சுற்றில் மூன்றாம் இடம் பிடித்து ஒலிம்பிக் தொடருக்கு திருச்சியைச் சேர்ந்த வீராங்கனையான தனலட்சுமி தகுதிபெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் தேர்வாகி, ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கு தேர்வாகியுள்ளார்.

பி.டி. உஷாவையே ஓவர்டேக் செய்த ‘தங்கத்தமிழ்’ மங்கை ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றார்!

திருச்சி விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவரின் இளம்பருவத்திலேயே தந்தை இறந்துவிட்டார். தாயான உஷாவின் பராமரிப்பிலேயே வளர்ந்துவந்திருக்கிறார். இவருக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர். தாயார் அல்லும் பகலும் உழைத்து மகளுக்காக ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களையும், கடன் வாங்கி ஸ்போர்ட்ஸ் ஷூவையும் வாங்கி தந்திருக்கிறார். 10 வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் பெரும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த தனலட்சுமியை அவரது தந்தை தான் ஊக்குவித்திருக்கிறார். ஆனால் அவரின் வெற்றியைப் பார்க்கும் முன்னே அவர் கண் மூடிவிட்டார் என்று வேதனைப்படுகிறார் தாய் உஷா.

பி.டி. உஷாவையே ஓவர்டேக் செய்த ‘தங்கத்தமிழ்’ மங்கை ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றார்!

இவர் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர். படிக்கும்போதே பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பதக்கங்களை அள்ளியிருக்கிறார். தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்கவும் தகுதி பெற்றுள்ளார். இவர் எப்பேர்பட்ட சாதனை வீராங்கனை என்பதற்கு அவர் வீடே சாட்சி. வீடு முழுவதும் பதக்கங்களும் பரிசுப் பொருட்களுமே நிறைந்திருக்கின்றன. பாட்டியாலாவில் மார்ச் 15ஆம் தேதி நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்ற தனலட்சுமி 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

பி.டி. உஷாவையே ஓவர்டேக் செய்த ‘தங்கத்தமிழ்’ மங்கை ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றார்!

100 மீ தூரத்தை 11.38 வினாடிகளில் கடந்தார். இதன்மூலம் சர்வதேச வீராங்கனைகளான டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தார். இதுமட்டுமில்லாமல் 1998ஆம் ஆண்டு பி.டி.உஷா நிகழ்த்திய முறியடிக்க முடியாத சாதனையான 23.30 வினாடி என்ற சாதனையையும் முறியடித்திருக்கிறார் தங்கமங்கை தனலட்சுமி. சிறு வயது முதலே எண்ணற்ற தடைகளைத் தாண்டி தடகள போட்டிகளில் தங்கத்தை வென்றவர் ஒலிம்பிக்கிலும் தங்கமாலை சூடுவார் என்று நம்புவோம். வாழ்த்துகள் தனலட்சுமி.