திருச்சி- 14 மையங்களில் குடிமைப் பணித் தேர்வு!-

 

திருச்சி- 14 மையங்களில் குடிமைப் பணித் தேர்வு!-

திருச்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. 14மையங்களில் 5 ஆயிரத்து 642 பேர் தேர்வெழுதுகின்றனர்.

திருச்சி- 14 மையங்களில் குடிமைப் பணித் தேர்வு!-

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு எனப்படும் யுபிஎஸ்சி தேர்வுகள் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வானது 9.30க்குத் தொடங்கி 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை இரு நிலைகளாக நடைபெறுகிறது.

திருச்சி- 14 மையங்களில் குடிமைப் பணித் தேர்வு!-

திருச்சி மாவட்டத்தில் வெஸ்ட்ரி பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, காவிரி மகளிர் கல்லூரி, சேஷசாயி தொழில்நுட்பக் கல்லூரி என 14 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுகூடத்திற்கு வரும் தேர்வாளர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கையை சுத்தப்படுத்த பின்னர் போலீசாரால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டு நுழைவுச்சீட்டு பேனா சோதனை செய்த பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.