திருமாவளவனை கைதுசெய்ய கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

 

திருமாவளவனை கைதுசெய்ய கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி

இந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கண்டித்து, திருச்சியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக துணை தலைவர் புரட்சி கவிதாசன்

திருமாவளவனை கைதுசெய்ய கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, இந்துக்களுக்கு எதிராக பேசி வரும் திருமாவளவனை போலீசார் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.