முன்னணி நிறுவனங்களின் பேரில் போலி எல்இடி டிவி விற்பனை – 3 பேர் கைது

 

முன்னணி நிறுவனங்களின் பேரில் போலி எல்இடி டிவி விற்பனை – 3 பேர் கைது

திருச்சி

திருச்சியில் தீபாவளி பண்டிகையையொட்டி முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி எல்இடி தொலைக்காட்சிகளை விற்பனை செய்த 3 பேரை கைதுசெய்த போலீசார், 153 தொலைக்காட்சிகளையும் பறிமுதல் செய்தனர். திருச்சி பீமநகர் பகுதியில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கடையில், தீபாவளி பண்டிகையையொட்டி முன்னணி நிறுவனங்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுஉபயோக பொருட்கள் குறைந்த விலையில் விற்பனைசெய்யப்பட்டுள்ளது. இதனால் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சவுகத் அலி என்பவர் 32 இன்ச் எல்இடி டிவியினை வாங்கியுள்ளார். அப்போது, கடை உரிமையாளர் உரிய ரசீது வழங்காத நிலையில், பழுது ஏற்பட்டால் கடைக்கு கொண்டுவருமாறு தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சவுகத் அலி, சர்வீஸ்சென்டரில் கொடுத்து பரிசோதித்தபோது அந்த டிவி போலியானது என தெரியவந்தது.

முன்னணி நிறுவனங்களின் பேரில் போலி எல்இடி டிவி விற்பனை – 3 பேர் கைது

இதுகுறித்து சவுகத் அலி அளித்த புகாரின் பேரில், பாலக்கரை போலீசார்விற்பனை நிலையத்திற்குச் சென்று அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது கடையில் இருந்த அனைத்து எல்.இ.டி டிவிக்களும் போலியானவை என்றுஞுதெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர் நிஜாமுதீன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைதுசெய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான 153 டிவிக்களை பறிமுதல் செய்தனர்.