கோபி சிபிஐ கூட்டத்தில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர்களுக்கு அஞ்சலி

கோபி சிபிஐ கூட்டத்தில்  நீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர்களுக்கு அஞ்சலி

கோபிசெட்டிபாளையத்தில் நடந்த சிபிஐ கூட்டத்தில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவ மாணவிகள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோபி சிபிஐ கூட்டத்தில்  நீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர்களுக்கு அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.எஸ்.சுப்பிரமணியம் நினைவகம் கட்டட அடிக்கல் நாட்டுவிழா கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. மூத்த தலைவர்
தா.பாண்டியன், மாநில செயலாளர் ரா.முத்தரசன், திருப்பூர் எம்பி.சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடப்பணியை தொடங்கி வைத்தனர்.

கூட்டத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் தொழிற்சங்க தலைவர் ராம்தாரி பராஷர்
மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கே.தங்கவேலு மற்றும் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோபி சிபிஐ கூட்டத்தில்  நீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர்களுக்கு அஞ்சலி

இக்கூட்டத்தில், மின்சாரம் பெறும் உரிமையைப் பறிக்க கூடாது, ஊரடங்கு உத்தரவு பிரிவு 144ஐ விலக்கிக்கொள்ள வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க
மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை திரும்பப்பெறு, மேகதாது பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திடவேண்டும். விவசாய நிலங்களை பாதிக்கும் திட்டங்களை கைவிடவேண்டும் என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.