Home ஆன்மிகம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, திருப்பதி கோயில் சார்பில் வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, திருப்பதி கோயில் சார்பில் வஸ்திர மரியாதை

திருச்சி

கைசிக ஏகாதசி தினத்தையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு, திருப்பதி கோயில் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் சிறப்பை உடையது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம். இங்கு கி.பி. 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் இஸ்லாமியர் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று திருப்பதி கோயில் தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெறுவது வழக்கம்.


அதன்படி, இன்று கைசிக ஏகாதசியை ஒட்டி, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்கள பொருட்களை கொண்டு வரப்பட்டது. திருப்பதி தேவஸ்தான செயல் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர்ரெட்டி ஆகியோர் தலைமையில் எடுத்துவரப்பட்ட இந்த பொருட்கள், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், பட்டாச்சார்யர்கள் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.


முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள் யானை மீது வைத்து கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு உள் பிரகாரங்களில் வலம்வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். பின்னர் இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் அலுவலர்கள், திருப்பதி தேவசம்போர்டு அதிகாரிகள், அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

புதுச்சேரி காங்கிரஸில் காலியான முக்கிய விக்கெட்… தாமரையை மலர வைக்க பாஜக போடும் கணக்கு பலிக்குமா?

தென்னிந்தியாவில் கால் பதிக்கும் நோக்கில் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதன் முதல் அடித்தளமாக அமைச்சர் நமச்சிவாயத்தை இன்று ராஜினாமா செய்யவைத்து,...

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – மலை கிராமங்களுக்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, முதுவாக்குடி, முந்தல், சிறைக்காடு, சோலையூர் ஆகிய பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

‘நான்கு தலைநகரம்’ – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு!

இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும் என்ற மம்தா பேனர்ஜியின் கோரிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,...

காங்கிரசின் அழைப்பிற்கு கமல் சொன்ன பதில்

கமல்ஹாசன் தங்களது கூட்டனிக்கு வரவேண்டும். இல்லையென்றால் ஓட்டுக்கள் வீணாக சிதறிவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து வலுயுறுத்தி வந்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!