கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

 

கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு

2006 வனஉரிமை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோபிசெட்டிப்பாளையத்தில் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் பெரியார்திடலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பர்கூர், கடம்பூர், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அனைத்து பழங்குடி மக்களுக்கும் கால தாமதமின்றி சாதிச்சான்றிதழ் வழங்கவும், 2020 சுற்றுச்சூழல் சட்டத்தை வாபஸ் பெறவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும்,
அனைத்து பழங்குடி மக்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி, தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்திட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்