பூவா தலையா போட்டு இரண்டு காதலிகளில் ஒரு காதலியை திருமணம் செய்து வைத்த பஞ்சாயத்தார்

 

பூவா தலையா போட்டு இரண்டு காதலிகளில் ஒரு காதலியை திருமணம் செய்து வைத்த பஞ்சாயத்தார்

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் சக்லேஷ்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் ஆறு மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு கிராமத்து பெண்ணையும் இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலித்து வந்திருக்கிறார்.

பூவா தலையா போட்டு இரண்டு காதலிகளில் ஒரு காதலியை திருமணம் செய்து வைத்த பஞ்சாயத்தார்

இளைஞர் ஒரு பெண்ணுடன் பழகுவது தெரிந்து அவரின் தந்தை விசாரித்தபோது தான் இரண்டு பெண்களை விரும்புவதாக சொல்லி இரண்டு பேரையுமே திருமணம் செய்து கொள்வதாகவும் சொல்லி அதிர வைத்திருக்கிறா. ர் ஆனால் அதற்கு தந்தை சம்மதிக்கவில்லை. இரண்டு பேரை தன் மகன் விரும்புகிறான் என்று கேள்விப்பட்ட தந்தை, இரண்டு பெண்களும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு இடத்தில் பெண் பார்த்து வந்திருக்கிறார்.

இதை அறிந்த இரண்டு பெண்களும் தங்கள் வீட்டினரிடம் விசயத்தை சொல்லியிருக்கின்றனர். இதை அடுத்து இரண்டு பெண்களின் வீட்டாரும் இளைஞரின் வீட்டிற்கு வந்து பேசியிருக்கிறார்கள். அப்போது ஊர் மக்களையும் திரட்டி பஞ்சாயத்து நடந்து இருக்கிறது.

பஞ்சாயத்தில் இரண்டு பெண்களில் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று இளைஞரிடம் கேட்க, அவர் எதுவும் பேசாமல் நின்றிருக்கிறார். அப்போது முதல் காதலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் . இந்த களேபரத்திற்கு பின்னர் மீண்டும் பஞ்சாயத்து கூடியிருக்கிறது . அப்போதும் இரண்டு பேரில் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறாய் என்று பஞ்சாயத்தார் கேட்க, இளைஞர் மௌனமாக நின்றிருக்கிறார்.

அப்போது மூன்று வீட்டாரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். அதன்படி பூவா தலையா போட்டுப் பார்த்து யாரை திருமணம் செய்து வைப்பது என்று பஞ்சாயத்தார் முடிவெடுத்திருக்கிறார்கள். பஞ்சாயத்தார் முன்னிலையில் பூவா தலையா போட்டபோது அதில் முதலில் காதலித்த பெண்ணுக்கே வெற்றி கிடைத்திருக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த இரண்டாவது காதலி முதல் காதலிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ஆனால் அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்து விட்டு, உன்னைவிட அருமையான மாப்பிள்ளையை பார்த்து நன்றாக வாழ்ந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுச் சென்றிருக்கிறார்.