5G ரெடி அலைக்கற்றை கிடைத்தவுடன் சோதனை தொடங்கும் – முகேஷ் அம்பானி அறிவிப்பு

 

5G ரெடி அலைக்கற்றை கிடைத்தவுடன் சோதனை தொடங்கும் – முகேஷ் அம்பானி அறிவிப்பு

‘ஜியோ 5G சேவைக்குத் தயாராக இருக்கிறது’ என்று அறிவித்திருக்கிறார் நிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி. ஒவ்வொரு ஆண்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டம் பெரிய அளவில் நடைபெறும். பலரும் அந்த விழாவில் கலந்துகொள்வார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக விழா ஏற்பாடு செய்ய வில்லை. அதற்கு மாற்றாக இணையம் வழியே கூட்டம் நடத்தப் பட்டது.

5G ரெடி அலைக்கற்றை கிடைத்தவுடன் சோதனை தொடங்கும் – முகேஷ் அம்பானி அறிவிப்பு

இந்த விழாவில் முகேஷ் அம்பானி ‘ஜியோ மீட் ஆப்ஸ் பல லட்சம் டவுண்லோடு செய்யப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார். மேலும், ஜியோவில் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் பெரிய தொகையை முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தார். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இயங்குதளத்தை தயாரிக்க கூகுள் – ஜியோ ஒப்பந்தம் போட்டுள்ளன. இதற்காக ஜியோவின் 7.7% பங்குகளை ரூ.33,737 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்திய பயனர்களுக்கு தொடக்க நிலை ஸ்மார்ட்போன்களை இந்தக் கூட்டணி உருவாக்கும். தற்போது இருக்கும் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையில் ஒரு பங்கு தான் அவை இருக்கும் என கூறியுள்ளார்.

5G ரெடி அலைக்கற்றை கிடைத்தவுடன் சோதனை தொடங்கும் – முகேஷ் அம்பானி அறிவிப்பு

ஜியோ 5ஜி சேவைக்கு தயாராகிவிட்டதாகவும், அலைக்கற்றை கிடைத்தவுடன் 5ஜி சோதனை தொடங்கும் என்றார்.அதே போல் ஜியோ – பேஸ்புக் கூட்டணியானது அதன் இ-காமர்ஸ் தயாரிப்பான ஜியோ மார்ட்டுக்கு வாட்ஸப்பை பயன்படுத்தும். விழாவில் ஓடிடி தளமான (இணைய வமுகேஷ் அம்பானி ழி திரைப்படங்கள், தொடர்கள்) ஜியோ டிவி+ அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.