ஆம்பன் புயல் எதிரொலி.. ஒடிசாவில் வேரோடு சாய்ந்த மரங்கள்!

 

ஆம்பன் புயல் எதிரொலி.. ஒடிசாவில் வேரோடு சாய்ந்த மரங்கள்!

வங்க கடலில் மிகக்கடும் புயலாக மாயிருந்த ஆம்பன் புயல் தற்போது வலுவிழந்து அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலால் மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த புயல்  ஒடிசாவின் பாரதீப்பிலிருந்து தெற்கே 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளதாகவும், வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இன்று இரவு வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆம்பன் புயல் எதிரொலி.. ஒடிசாவில் வேரோடு சாய்ந்த மரங்கள்!

இந்த புயலின் காரணாமாக மேற்கு வங்கத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதே போல  ஒடிசாவின் பாலசூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்த ஆம்பன் புயல் கரையை கடக்கும் நிலையில், ஆம்பன் புயல் அதன் வேகத்தை கூட்டி வருகிறது. இதனால் ஒடிசாவில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி மரங்கள் வேரோடு சாய்கின்றன. இந்த புயல் கரையை கடப்பதற்குள் ஒடிசா அதிக அளவில் சேதத்தை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.