கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை

 

கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை

கரூர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உடல் கருகிய நிலையில் சாலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள், தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்த நபர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்த பாஸ்கரன்(40) என்பது தெரியவந்தது. டிராவல்ஸ் தொழில் செய்து வந்த பாஸ்கரன், கடன் தொல்லையால் அவதிபட்டு வந்த நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு, தீக்குளித்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடன் தொல்லையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.