தனி விமானத்தில் நண்பர்களுடன் மொரீஷியஸ் பயணம் : ஓபிஎஸ் மகனிடம் விசாரணை நடத்த உத்தரவு!

தனி விமானத்தில் நண்பர்களுடன் மொரீஷியஸ் பயணம் : ஓபிஎஸ் மகனிடம் விசாரணை நடத்த உத்தரவு!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தனி விமானத்தில் வெளிநாடு சென்றது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலி இந்தியாவையும் முடக்கியுள்ளது. இதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் போராடி வருகிறார்கள்.

தனி விமானத்தில் நண்பர்களுடன் மொரீஷியஸ் பயணம் : ஓபிஎஸ் மகனிடம் விசாரணை நடத்த உத்தரவு!

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும், எம்.பியுமான ரவீந்திரநாத் குமார் கடந்த வாரம் தனது நண்பர்களுடன் தனி விமானத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து மொரீஷியஸ் சென்றுள்ளார். மொரீஷியஸ் தீவில் இந்திய மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள் பலர் தங்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.

தனி விமானத்தில் நண்பர்களுடன் மொரீஷியஸ் பயணம் : ஓபிஎஸ் மகனிடம் விசாரணை நடத்த உத்தரவு!

அந்த வகையில் ரவீந்திரநாத் குமார் மொரீஷியஸ் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ரவீந்திரநாத் குமார் மத்திய அரசு அனுமதி இல்லாமல் தனி விமானத்தில் வெளிநாடு சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் விமானம் மூலம் மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ் நாட்டில் தரை இறங்குவதற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி வழங்கியுள்ளார். இருப்பினும் வெளிநாடு சுற்றுலா செல்ல அவர் மத்திய அரசிடம் அனுமதி வாங்கவில்லை என்று தெரிகிறது .இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஓபிஎஸ் மற்றும் எம்.பி. ரவீந்திரநாத் குமாரிடம் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.