கோவிஷீல்டு போட்டவர்களுக்கு புது சிக்கல்

 

கோவிஷீல்டு போட்டவர்களுக்கு புது சிக்கல்

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படுதாக எழுந்துள்ள பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு போட்டவர்களுக்கு புது சிக்கல்

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆட்டிப்படைத்துவரும் நிலையில்,அந்த வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. குறுகிய காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வதற்கு கட்டயாத் தேவையாக இருக்கும் கிரீன் பாஸ்-களில் ஆஸ்ட்ராஜெனகாவின் இந்திய பதிப்பான கோவிஷீல்டை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகம் சேர்க்கவில்லை. இதனால் அங்கு பயணம் செய்ய முயலும் பல இந்தியர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அடார் பூனாவாலா, ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட அதிகாரிகளுடனும், தூதரக அளவிலும் பேசி இதற்கு தீர்வு காண்பதாக டுவிட்டரில் உறுதி அளித்துள்ளார்.