கோயில் மூடப்பட்டதால் ரூ.200 கோடி இழப்பு….. நிதி நெருக்கடியால் கோயில் விளக்குகளை ஏலம் விடும் திருவாங்கூர் தேவஸ்தானம்…..

கோயில் மூடப்பட்டதால் ரூ.200 கோடி இழப்பு….. நிதி நெருக்கடியால் கோயில் விளக்குகளை ஏலம் விடும் திருவாங்கூர் தேவஸ்தானம்…..

லாக்டவுன் காரணமாக கேரளாவில் திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின்கீழ் உள்ள அனைத்து கோயில்களும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்துக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அனைத்து கோயில்களிலும் பயன்படுத்தாமல் உள்ள விளக்குகள், பாத்திரங்களை விற்பனை செய்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் வாரிய தலைவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். தேவஸ்தானம் துணை ஆணையர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் முன்னிலையில் 1,248 கோயில்களில் உள்ள விலை மதிப்பில்லாத பொருட்களை சேகரிக்க வாரியம் முயன்று வருகிறது.

கோயில் மூடப்பட்டதால் ரூ.200 கோடி இழப்பு….. நிதி நெருக்கடியால் கோயில் விளக்குகளை ஏலம் விடும் திருவாங்கூர் தேவஸ்தானம்…..

கோயில்களுக்கு சொந்தமான விளக்குகள், பாத்திரங்களை ஸ்கிராப் வியாபாரிகளுக்கு ஏலம் விட்டு நிதி திரட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு இந்து ஐக்ய வேதி உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் கோயில் பொருட்களை ஏலம் விடும் முடிவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. மேலும் அந்த மனுவில், தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களை பயன்படுத்த முடியாத உலோகங்களிலிருந்து பிரித்து வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான வாரியத்தின் நடவடிக்கை குறித்தும் மனுவில் கேவி எழுப்பப்பட்டு இருந்தது. இது தொடர்பாக 7 நாட்களுக்குள் பிராமண பத்திரம் தாக்கல் செய்யுமாறு திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் மூடப்பட்டதால் ரூ.200 கோடி இழப்பு….. நிதி நெருக்கடியால் கோயில் விளக்குகளை ஏலம் விடும் திருவாங்கூர் தேவஸ்தானம்…..

இந்நிலையில், நேற்று திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் தலைவர் என். வாசு கூறியதாவது: நாடு தழுவிய லாக்டவுனால் தேவஸ்தானம்கீழ் உள்ள அனைத்து கோயில்களும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் ஒட்டு மொத்த அளவில் ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தின்படி, 2.5 சதவீத வட்டியில் தங்கத்தை நாம் வங்கியில் வைக்கலாம். ஆகையால் நாணயம், கட்டிகள் உள்ளிட்ட தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்வது சிறந்தது என நாங்கள் நினைத்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.