மகள் தூக்கில் தொங்குவதை கணவனிடம் சொல்லப்போன பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

 

மகள் தூக்கில் தொங்குவதை கணவனிடம் சொல்லப்போன பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசித்து வந்த வர் பீதாம்பரன்(61). இவர் கரிப்பூர் விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். பீதாம்பரத்டின் மனைவி பிரபாவதி. இத்தம்பதிக்கு பிறந்த மகள் ஷரிகா (31) மகள்.

மகள் தூக்கில் தொங்குவதை கணவனிடம் சொல்லப்போன பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

ஞாயிறு மதிய உணவு அருந்திவிட்டு பிரபாவதி ஹாலில் படுத்து தூங்கிவிட்டார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மகள் ஷரிகாவை காணவில்லை.

ஷரிகாவின் அறைக்கதவு திறந்து கிடக்க அங்கே சென்று பார்த்தவருக்கு பேரதிர்ச்சி. மின்விசிறியில் ஷரிகா தூக்கிட்டு தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்த கதறியிருக்கிறார். உடனே, நம் மகள் இறந்துவிட்டால் என்று கணவனிடம் சொல்ல அவர் அறைக்கு ஓடியிருக்கிறார். அங்கே கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. வெகுநேரம் தட்டியும் கதவு திறக்காததால், மகள் இறந்த துக்கத்தையும் மறந்து அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி கதவை உடைத்தார்.

மகள் தூக்கில் தொங்குவதை கணவனிடம் சொல்லப்போன பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

அங்கே படுக்கையறையில் மின்விசிறியில் கணவன் தூக்கில் தொங்கிகொண்டிருந்ததை பார்த்து கதறி அழுதார்.

மகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் என்று சொல்ல வந்தேனே. இங்க நீங்களே தற்கொலை செய்துகொண்டுவிட்டீர்களே என்று கதறி துடித்தார் பிரபாவதி. தனித்தனி மின் விசிறியில் தந்தையும் மகளும் தற்கொலை செய்து கொண்ட விசயம் கேரள மாநிலத்தை அதிர வைத்திருக்கிறது.

ஷரிகா சில ஆண்டுகளாக உளவியல் ரீதியான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை மகள் இருவரும் ஒரே நேரத்தில் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதற்காக காரணம் தெரியவில்லை.

தற்கொலைக்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் சிக்கியிருக்கிறது. போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அதில் உள்ள தகவல்களை போலீசார் இன்னமும் வெளியிடவில்லை.