போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மே மாத முழு ஊதியம் வழங்க வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

 

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மே மாத முழு ஊதியம் வழங்க வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மே மாதம் முழு ஊதியம் வழங்க நிர்வாகங்கள் மறுத்துவருவது கண்டிக்கத்தக்கது, முழு ஊதியம் வழங்க முன்வர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்க நிர்வாகங்கள் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டது போலவே, மே மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க போக்குவரத்துக் கழகங்கள் முன்வர வேண்டும்!

http://

ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வராத நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ள நிலையில், அதை போக்குவரத்துக் கழகங்கள் மதிக்காமல் இருப்பது நியாயமல்ல. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தை வழங்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

http://

மற்றொரு ட்வீடில், “ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதற்கு கொரோனா ஆபத்து விலகிவிட்டது என்று பொருள் அல்ல. இப்போது நோய்ப்பரவல் ஆபத்து அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் இனி கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் வழக்கமாக மாற வேண்டும்!” என்று கூறியுள்ளார்.