சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

 

சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அரசு அறிவித்திருந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கிறது. பேருந்து சேவை இல்லாததால் வேலைக்கு செல்வோரும், வேலைக்கு வரும்படி நிறுவனத்தால் வற்புறுத்தப்படுவோரும் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

இந்நிலையில் சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பணிமனைகளும் பராமரிப்பு செய்து, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து பேருந்துகளை தயார்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.