கனமழை எதிரொலி: நீலகிரியில் போக்குவரத்து நிறுத்தம்!

 

கனமழை எதிரொலி: நீலகிரியில் போக்குவரத்து நிறுத்தம்!

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பொழிவு மற்றும் காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை- கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் விழும் அபாயம் உள்ளதால் இன்று(05.08.2020) மாலை 7 மணி முதல் நாளை(06.08.2020) காலை 6 மணி வரை வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். காற்று, மழை அதிகமாக உள்ளதால் வரும் 8 ஆம் தேதி வரை தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணப்பு மீட்பு படைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை சமாளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. ஆபத்தான மரங்கள் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழை எதிரொலி: நீலகிரியில் போக்குவரத்து நிறுத்தம்!

நீலகிரி – உதகையில் கனமழை எதிரொலியால் சோலூர் அருகே கக்கஞ்சி நகரை சேர்ந்த ரவி மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் உதகை பிங்கர் போஸ்ட் அருகேயுள்ள ஆர்.சி காலனி பகுதியில் மரம் விழுந்ததில் சாதிக் என்பவர் உயிரிழந்தார். கூடலூரில் பலத்த காற்றுடன் பெய்யும் கனமழையில் 2000 வாழை மரங்கள் சேதமடைந்தன. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.