சென்னை சென்ட்ரலில் நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி!

 

சென்னை சென்ட்ரலில் நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி!

நிவர் புயலின் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. கடற்கரை பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட்டதால், மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது. குறிப்பாக ஈசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்தை தவிர்க்குமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி!

இதை தொடர்ந்து அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து முடக்கப்பட்டது. மணலி முதல் தாம்பரம் வரையில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அதே போல, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அங்கு செல்லாத வண்ணம் தடுக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக சென்னையில் பாதிப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை சென்ட்ரலில் நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுவதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். மாநகரப் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.