கொரோனா வைரஸ் பரவ ‘அந்த’ விலங்கு தான் காரணம்? – சீனாவிலிருந்து கசிந்த ரகசிய ரிப்போர்ட்!

 

கொரோனா வைரஸ் பரவ ‘அந்த’ விலங்கு தான் காரணம்? – சீனாவிலிருந்து கசிந்த ரகசிய ரிப்போர்ட்!

லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்துள்ளது கொரோனா எனும் அரக்கன். பல கோடி பேருக்கு உயிர் பயம் காட்டியிருக்கிறது. இன்னமும் வெளியேறாமல் உருமாற்றம் அடைந்து தனது தீவிரத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், மற்றொரு புறம் அது எப்படி பரவியது என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதுவரையிலுமே அதற்கான விடை கிடைத்தபாடில்லை. ஆரம்பத்தில் வௌவால்களிடமிருந்து பரவியிருக்கலாம் என்ற அணுமானம் சொல்லப்பட்டது. மேலும் சீனாவிலுள்ள ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டது என்ற வதந்தியும் பரவியது.

கொரோனா வைரஸ் பரவ ‘அந்த’ விலங்கு தான் காரணம்? – சீனாவிலிருந்து கசிந்த ரகசிய ரிப்போர்ட்!

அதற்காக சீனாவில் ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவுசெய்ய ஆரம்பத்தில் அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்தது. பின்னர் உலக நாடுகள் எதிர்க்கவே சீனா ஆய்வு நடத்த சம்மதித்தது. உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர் பீட்டர் பென் எம்பார்க் தலைமையிலான குழுவினர் சீனாவின் வூஹானில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு முடிவு இன்னும் ஒருசில வாரங்களில் வெளியிடப்படும் என்று கூறிய நிலையில், அதிலிருந்து முக்கிய தகவல் கசிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவ ‘அந்த’ விலங்கு தான் காரணம்? – சீனாவிலிருந்து கசிந்த ரகசிய ரிப்போர்ட்!

அதன்படி கொரோனா வைரஸ் வௌவால்களிடமிருந்து பரவியிருக்கலாம். இருப்பினும், வௌவால்களிடமிருந்து நேரடியாகப் பரவியிருக்க வாய்ப்பில்லை. முதலில் வௌவால்களிடமிருந்து ஒரு விலங்குக்குப் பரவி அதன்பின்பே மனிதர்களைத் தாக்கியுள்ளது. அது வீட்டில் வளர்க்கப்படும் கீரிப்பிள்ளையாகவோ, பூனையாகவோ இருக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களின் பாதிப்பு எறும்புத்தின்னி, கீரி, பூனைகளில் காணப்படுவதால் அவை மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம். ஆனால் சீன ஆய்வகங்களில் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. இவ்வாறு அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.