Transgenders Day- மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 

Transgenders Day- மு.க.ஸ்டாலின் ட்வீட்!

கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதியை திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ஏப்ரல் 15 ஆம் ஆண்டு தோறும் தேசிய திருநங்கையர் தினமாகக் திருநங்கைகள் கொண்டாடி வருகின்றனர்.

Transgenders Day- மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருநங்கையர் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை நினைவூட்டும் #TransgendersDay இன்று! திருநங்கை எனும் சொல்லுக்கு அரசின் அங்கீகாரம் அளித்து, தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர்! அவர் வழியில் திருநங்கையர்-திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும்!” என பதிவிட்டுள்ளார்.