காவலர் பயிற்சியில் இருந்த திருநங்கை தற்கொலை முயற்சி

 

காவலர் பயிற்சியில் இருந்த திருநங்கை தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில், பயிற்சி பெற்றுவந்த திருநங்கை அமிலம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவலர் பயிற்சியில் இருந்த திருநங்கை தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சம்யுக்தா (24) காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று, நவல்பட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில் பிறந்த நாளான இன்று சம்யுக்தா அமிலம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவலர் பயிற்சியில் இருந்த திருநங்கை தற்கொலை முயற்சி

இதில் காவலர் பயிற்சி கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அடிக்கடி சம்யுக்தாவின் பிறப்பு குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்யுக்தாவிடம் நீதிபதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, தற்கொலைக்கான காரணம் குறித்தும், காவல்துறையினர் மிரட்டி உண்மையை சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனரா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

காவலர் பயிற்சியில் இருந்த திருநங்கை தற்கொலை முயற்சி

இதனிடையே தற்கொலை முயற்சி குறித்து கூறியுள்ள சம்யுக்தா,

காவலர் பயிற்சியில் தனது உடல் ஒத்துழைக்கவில்லை என்று கூறினார். மேலும், காவலர் பயிற்சி பள்ளி முதல்வரும், துணை முதல்வரும், தனது பிறப்பு குறித்து தவறாக கூறியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் கூறினார்.