மதுரையில் த‌ள்ளுவண்டியில் உணவகம் தொடங்கிய திருநம்பிகள்!

 

மதுரையில் த‌ள்ளுவண்டியில் உணவகம் தொடங்கிய திருநம்பிகள்!

இந்த உலகம் எல்லோருக்குமானது என்றுதான் பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஆண்களுக்கான உலகமாக இருக்கிறது என்பதே யதார்த்தம். கல்வி, வேலை, உரிமை என ஒவ்வொன்றுக்கும் பெண்கள் போராடி போராடித்தான் பெற வேண்டியிருந்தது; வேண்டியிருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டாகத்தான் பெண்கள் இந்த உலகைப் பங்கிட்டுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பெண்களே இத்தனை பல்லாண்டுகள் ஆகியிருக்கின்றன என்றால், திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்டோருக்கான வாய்ப்புகள் எப்போது கிடைக்கும் என்பதே விடை கண்டறிய முடியாத கேள்வியாகத்தான் தொக்கி நிற்கிறது. ஆயினும் திருநங்கைகளில் பலர் படித்து வேலைக்குச் செல்வதும் தன்னைப் போல சிரமப்படுபவர்களுக்கு உதவுவதும் நடப்பதைப் பார்க்க முடிகிறது.

மதுரையில் த‌ள்ளுவண்டியில் உணவகம் தொடங்கிய திருநம்பிகள்!

அப்படியான திருநங்கைகளில் ஒருவர்தான் பிரியாபாபு. நடிகர், ஆவணப்பட இயக்குநர், களச்செயற்பாட்டாளர் என பன்முக ஆற்றல் கொண்டவர் பிரியா பாபு. எங்கும் துணிச்சலோடு திருநங்கைகளுக்கான உரிமைகளைப் பெற்றுத்தர குரல் கொடுப்பவர். தன்னார்வத் தொண்டு நிறுவனத்தோடு இணைத்துக்கொண்டவர்.

மதுரையைச் சேர்ந்த‌ திருநம்பிகளுக்கு (பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள்) சுயத் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வழிசெய்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் திருநம்பிகள் நடத்தும் அசைவ உணவுத் தள்ளுவண்டி கடையைத் தொடங்க உதவி செய்திருக்கிறார். கடைக்கான தள்ளுவண்டிக்கான செலவை ஏற்றத்தோடு SELCO நிறுவனத்தின் மூலம் 60 சதவிகித மானியத்துடன் சோலார் விளக்கு, பூமி அறக்கட்டளை சார்பாக சமையல் பொருள்கள் வாங்கித்தந்துள்ளனர்.

மதுரையில் த‌ள்ளுவண்டியில் உணவகம் தொடங்கிய திருநம்பிகள்! ‘இது தமிழகத்தில் முதன்முதலாக‌ திருநம்பிகள் தொடங்கும் சுயதொழில்’ என்று பெருமையோடு பதிவிட்டுள்ளார்.

இந்தச் சமூகம் விளிம்புநிலை மக்களுக்கு தடைகளை உருவாக்கத்தான் செய்யும். ஆனால், அம்மக்களிலிருந்து எழுந்து வருபவர்கள் தங்களைப் போல போராடி வரும் மனிதர்களைக் கைத்தூக்கி விடுவார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமே முக்கியமான சாட்சி.