திருநம்பியாக மாறிய ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்

 

திருநம்பியாக மாறிய ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்

ஆண் – பெண் எனும் இரு பாலினம் என்பது மட்டுமே இந்த உலகில் இருப்பதாகச் சில ஆண்டுகள் வரை அழுத்தமாக நம்ப வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மாற்றுப் பாலினத்தவர் மீதான கவனிப்பும், பார்வையும் சமீப ஆண்டுகளாக மாறி வருகிறது.

தங்கள் உடலிலும் மனத்திலும் நிகழும் மாற்றங்களைத் தயங்காமல் வெளிப்படுத்தும் பழக்கம் அதிகமாகி வருகிறது. இந்தியாவிலும் மாற்றுப்பாலினத்தவர் பல்வேறு பொறுப்புகளில் பங்கு பெறுகின்றனர்.

திருநம்பியாக மாறிய ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை எலன் கிரேஸ் பேஜ். இவர் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தவர். தி ட்ராஸி ஃப்ரக்மெண்ட்ஸ், சூப்பர், இன்செப்ஷன் உள்ளிட்ட படங்கள் அவற்றில் அடங்கும்.

இவரது நடிப்புக்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். ஆஸ்கர், கோல்டன் குளோப் விருதுகளுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வீக்லி இதழின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பிடித்தவர்.

திருநம்பியாக மாறிய ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்

இவர் தன்னை திருநம்பியாக மாற்றிக்கொண்டிருக்கிறார். இதற்காக தனது பெயரை எலியட் பேஜ் என்றும் மாற்றிக்கொண்டிருக்கிறார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இந்த மாற்றம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனபோதும் கேலி செய்யப்படுவமோ என்ற சிறுபயத்தையும் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.