சேலம் கொரோனா நோயாளிகளைக் கரூருக்கு கடத்தும் அரசு! – தி.மு.க எம்.பி குற்றச்சாட்டு

 

சேலம் கொரோனா நோயாளிகளைக் கரூருக்கு கடத்தும் அரசு! – தி.மு.க எம்.பி குற்றச்சாட்டு

சேலத்தில் கொரோனா நோயாளிகள் இல்லை என்று காட்ட, சேலத்தில் கண்டறியப்படும் கொரோனா நோயாளிகள் கரூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்படுவதாக தி.மு.க எம்.பி செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் கொரோனா நோயாளிகளைக் கரூருக்கு கடத்தும் அரசு! – தி.மு.க எம்.பி குற்றச்சாட்டுதமிழகத்தில் மற்ற எல்லா மாவட்டங்களையும் விட கொங்கு மண்டலத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் அங்கு கண்டறியப்படும் நோயாளிகள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது.

http://

இது குறித்து தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “வரும் நாட்களில் சேலத்திலிருந்து கொரோனா பாசிட்டிவ் கேஸ் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகள் பதிவாக வாய்பில்லை. மேலிட உத்தரவின்படி சேலத்தில் இருந்து அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் கரூர் மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம். அந்த மேலிடம் யார் என்பது தவழும் குழந்தைக்கும் தெரியும்.” என்று கூறியுள்ளார்.