‘அனைத்து ரயில்களும்’ தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

 

‘அனைத்து ரயில்களும்’ தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவையடுத்து அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

‘அனைத்து ரயில்களும்’ தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி நாளை இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு நேர ஊரடங்கு தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை விதித்தும் அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் அவர்களுக்கு மட்டும் தனியார் பேருந்து பேருந்து போக்குவரத்து செயல்படலாம் என்றும் கூறியுள்ளது. இந்த சூழலில் ஊரடங்கு ரயில் சேவைகளும் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்தது.

‘அனைத்து ரயில்களும்’ தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

ஆனால் இது குறித்து தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு, ரயில்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வேயிடம் எழுப்பவில்லை. இதனால் தமிழகத்தில் அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மாஸ்க் அணியவேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணியாத பயணிகளுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அபராத தொகையை ரயில் நிலைய மேலாளர் ,டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் கூறியுள்ளது.