நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி!

நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலையை தடுக்க தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வானது மாலை 5 மணிக்கு முடிவடையும். இந்தக் தேர்வுக்காக தமிழகத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி!

இதனிடையே நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாணவர்கள் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்து வருகின்றனர். நேற்று ஒரேநாளில் மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தருமபுரியை சேர்ந்த ஆதித்யா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் உள்ளிட்ட மூன்று பேர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி!

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலையை தடுக்க தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று உறுதிப்பட கூறியுள்ளார்.