வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது எப்படி? தீயணைப்பு படை வீரர்களுக்கு திருவள்ளூர் குளத்தில் பயிற்சி!

வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது எப்படி? தீயணைப்பு படை வீரர்களுக்கு திருவள்ளூர் குளத்தில் பயிற்சி!

வட கிழக்கு பருவ மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு மீட்பு படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்குபவர்களை உடனடியாக மீட்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் திருவள்ளூரில் உள்ள பிரசித்தி வீரராகவர் கோயில் திருக்குளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது எப்படி? தீயணைப்பு படை வீரர்களுக்கு திருவள்ளூர் குளத்தில் பயிற்சி!

தண்ணீரில் சிக்கிக் கொண்டவர்களை தெர்மோகோல் மூலமாகவும், லாரி டயர் மூலமாகவும், சைக்கிள் சக்கரம் போன்ற வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது எப்படி? தீயணைப்பு படை வீரர்களுக்கு திருவள்ளூர் குளத்தில் பயிற்சி!

திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்து காண்பித்தனர். ஆற்றில் அடித்து செல்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும், முதலுதவி அளிப்பது குறித்தும், மீட்பு படையினர் இல்லாத போது தனக்குத் தானே எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர்.