கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் செவிலியர்களுக்கு பயிற்சி : ராதாகிருஷ்ணன் பேட்டி!

 

கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் செவிலியர்களுக்கு பயிற்சி : ராதாகிருஷ்ணன் பேட்டி!

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸால் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஒரு மாதத்தில் அங்கிருந்து வந்த நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் செவிலியர்களுக்கு பயிற்சி : ராதாகிருஷ்ணன் பேட்டி!

அப்போது பேசிய அவர், “இங்கிலாந்தில் இருந்து 2700க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக தற்போது 511 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கார்கோ விமானத்தில் வந்த 9 பேர் குறித்து மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதுவரை 38 ஆயிரம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. எல்லாரும் மாஸ்க் அணிந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து, “சென்னை ஏர்ப்போர்டில் நிரந்தர கொரோனா சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த பேரை கண்காணித்து வருகிறோம். கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் போடப்படும். தடுப்பூசி போடுவதற்காகவே 21 ஆயிரம் நர்ஸுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். மேலும், கொரோனா தடுப்பூசியை பதப்படுத்தவும் சேமித்து வைக்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.