போலீஸ்னா எப்படி இருக்கணும் தெரியுமா? தருமபுரியில் நடந்த பயிற்சி முகாம்!

போலீஸ்னா எப்படி இருக்கணும்  தெரியுமா? தருமபுரியில் நடந்த பயிற்சி முகாம்!

தருமபுரியில் கிராம கண்காணிப்பு காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்து முடிந்தது.

போலீஸ்னா எப்படி இருக்கணும்  தெரியுமா? தருமபுரியில் நடந்த பயிற்சி முகாம்!

தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டியில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் பயிற்சி முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தலைமை தாங்கினார். அப்போது காவலர்கள் மத்தியில் பேசிய அவர், “காவலர்கள் ஒவ்வொருவரையும் கிராமத்தின் கிராம கண்காணிப்பு காவல் அதிகாரியாக நியமித்துள்ளோம். நீங்கள் அனைவரும் தாய் கிராமங்களில் காவல்துறை விதித்துள்ள விதிகளின் படி செயல்படவேண்டும். குற்ற சம்பவங்கள், சதிச் செயல்கள் போன்றவை அரங்கேறாத வகையில் கிராமங்களில் தொடர்ந்து கண்காணித்து முன்கூட்டியே தகவல் அறிய வேண்டும். இதன் மூலம் பல குற்ற சம்பவங்களை தடுக்கலாம். அத்துடன் உங்கள் ஒதுக்கப்பட்ட கிராமங்களை தவிர பிற இடங்களிலும் குற்ற சம்பவங்கள் நடந்திடாத வண்ணம் கவனமுடன் இருக்க வேண்டும்” என்றார்.

போலீஸ்னா எப்படி இருக்கணும்  தெரியுமா? தருமபுரியில் நடந்த பயிற்சி முகாம்!

இந்த பயிற்சி முகாமின் போது, காவலர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4 காவல்துறை துணை சரகங்களை சேர்ந்த கிராம கண்காணிப்பு காவல் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.