குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு குறித்து, காவலர்களுக்கு பயிற்சி முகாம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு குறித்து, காவலர்களுக்கு பயிற்சி முகாம்

தேனி

தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களை தடுப்பது குறித்து, காவல்துறையினருக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்த முகாம், தேனி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு குறித்து, காவலர்களுக்கு பயிற்சி முகாம்

இதில், கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், மாவட்டத்தில் உள்ள டி.எஸ்.பிக்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் பேசிய எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதில், காவல் துறையின் பங்களிப்பு குறித்தும், பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு குறித்து, காவலர்களுக்கு பயிற்சி முகாம்

அத்துடன், போக்சோ சட்டத்தின்படி பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் உள்ளிட்ட எந்தவித வன்முறையிலும் ஈடுபடுவோர் மீது கடுங்காவல் தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டனை வழங்குவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னதாக, எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி-க்கு, வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் சைல்டு லைன் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.