சென்னையில் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

 

சென்னையில் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததால், அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதன் படி கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இடையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்காக மட்டும் ஒரு சில இடங்களில் குறைந்த அளவிலான பேருந்துகளும், வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இந்நிலையில் வரும் 7 ஆம் தேதி முதல் ஒரு மாவட்டம் விட்டு பிற மாவட்டங்கள் செல்ல பேருந்துகளை அனுமதிப்பதாகவும் பயணிகள் ரயில் சேவையை அனுமதிப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

சென்னையில் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

இந்நிலையில் ரயில் பயணம் மேற்கொள்ள சென்னையில் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.