நிவர் புயலால் ரயில் சேவை ரத்து!

 

நிவர் புயலால் ரயில் சேவை ரத்து!

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நிவர் புயலால் ரயில் சேவை ரத்து!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் நான்கு கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 5 கிலோ மீட்டராக அதிகரித்து வருகிறது. இந்த புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும், என்றும் இந்த புயல் நாளை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிவர் புயலால் ரயில் சேவை ரத்து!

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் ,மயிலாடுதுறை மார்க்கமாக செல்லும் ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல் உழவன் விரைவு ,சோழன் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சைக்கு செல்லும் ரயில்கள் இன்றும், நாளையும், திருச்சிக்கு செல்லும் ரயில் நாளை மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.