“அதிதீவிர புயலாக மாறும் நிவர்” – தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து!

“அதிதீவிர புயலாக மாறும் நிவர்” – தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து!

நிவர் புயல் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

“அதிதீவிர புயலாக மாறும் நிவர்” – தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து!

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் சென்னையில் இருந்து 430 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இன்று காலை தொடர்ந்து 3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டிருந்த நிவர் புயல், தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருவதால் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் போது 120 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“அதிதீவிர புயலாக மாறும் நிவர்” – தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து!

இந்த புயலின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து இருமார்க்கத்திலும் இயக்கப்படும் 24 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாகவும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

“அதிதீவிர புயலாக மாறும் நிவர்” – தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து!