ஆல் ரவுண்டருக்கு நேர்ந்த பரிதாபம் – பக்கவாதத்தினால் கால்கள் செயலிழப்பு

 

ஆல் ரவுண்டருக்கு நேர்ந்த பரிதாபம் – பக்கவாதத்தினால் கால்கள் செயலிழப்பு

உயிருக்கு போராடி வந்த பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ்(Chris Cairns) அறுவை சிகிச்சைக்கு பின்னர் அண்மையில் நலம்பெற்றதால் அவரிடம் இருந்து உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனாலும், பக்கவாதத்தினால் கால்கள் செயலிழந்து போயிருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆல் ரவுண்டருக்கு நேர்ந்த பரிதாபம் – பக்கவாதத்தினால் கால்கள் செயலிழப்பு

நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ்(51). கடந்த 1989ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரைக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று ஓய்வு பெற்றார். 62 டெஸ்ட், 215 ஒருநாள் போட்டி, இரண்டு டி-20 என நியூசிலாந்து அணிக்காக விளையாடிய கெய்ன்ஸ், ஓய்வுக்கு பின்னர் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். டி-20 போட்டியில் சண்டிகர் லயன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது சூதாட்ட குற்றம் சுமத்தப்பட்டது. சட்டப்போராட்டங்களுக்கு பின்னர் தன்னை நிரபராதி என்று நீருபித்தவர் கெய்ன்ஸ்.

மூன்றாவது மனைவியுடன் நியூசிலாந்தில் வசித்து வந்த கெய்ன்ஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆல் ரவுண்டருக்கு நேர்ந்த பரிதாபம் – பக்கவாதத்தினால் கால்கள் செயலிழப்பு

பரிசோதனையில் அவருக்கு இதயக்கோளாறு இருப்பது தெரியவந்தது. உடலில் ரத்த நாளம் கிழிபட்டிருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இருந்தது. கவலைக்கிடமான நிலைக்கு சென்றதால், உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உயிருக்கு போராடி வந்த கிறிஸ் கெய்ன்ஸ் விரைவில் நலம்பெற கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறி வந்திருக்கிறது. இதையடுத்து அவர் உடலில் இருந்து உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்டுள்ளது. குடும்பத்தினருடனும் பேசியிருக்கிறார் கெய்ன்ஸ் என்று செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் அவருக்கு பக்கவாதத்தினால் கால்கள் செயலிழப்பு ஏற்பட்டுள்ளன என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவர் மேலும், இதயத்தில் இருந்து வயிற்றுப்பகுதிக்கு ரத்தம் எடுத்து செல்லும் பெருந்தமணியின் உட்புறம் கிழிந்தது. பெருந்தமணி உடலில் மிக முக்கியமான ரத்த நாளம் என்பதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால்தான் செயற்கை சுவாம் பொருத்தப்பட்டிருந்தது. கவலைக்கிடமான நிலையில்தான் இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. முதுகுதண்டில் எற்பட்ட பாதிப்பினால் அவரது கால்கள் செயலிழந்து விட்டன. எனவே, கால்களுக்கு சிகிச்சை தர முதுகு தண்டு வட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றுதெரிவித்துள்ளார்.