தேவையின்றி வெளியில் சுற்றியவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

தேவையின்றி வெளியில் சுற்றியவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மக்கள் பொது இடங்களில் தேவையில்லாமல் கூட வேண்டாம் என்றும் முக கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

தேவையின்றி வெளியில் சுற்றியவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

இருப்பினும் அரசின் அறிவுறுத்தலை சிலர் ஏற்க மறுத்து வாகனங்களில் தேவை இல்லாமல் சுற்றி வருகின்றனர். இவர்களை கண்காணிக்கும் காவல்துறையினர் தொடர்ந்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதித்து வருகின்றனர்.

தேவையின்றி வெளியில் சுற்றியவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றி வந்தவர்களிடம் சுமார் ரூ.21.68 கோடி அபராதமாக வசூலித்துள்ளனர். 6.93 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 9.95 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8.98 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.