நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டாம்.. சாலை விதிமீறல் அபராதங்களை இனிமேல் ஆன்லைனில் செலுத்தலாம்!

தமிழகத்தில் சாலை விதிமீறலுக்கு குறையே கிடையாது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான விபத்துகள் இந்த சாலை விதிமீறல்கள் மூலமாக நடப்பதால் அபராதங்கள் கடுமையாக்கப்பட்டன. குறிப்பாக ஹெல்மெட் அணியாமலும், சிக்னல்களை மீறியும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என எல்லாவற்றுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அவ்வாறு விதிக்கப்படும் அபராதங்களை வாகன ஓட்டிகள் போலீசாரிடமோ அல்லது மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலோ நேரில் சென்று செலுத்தலாம் என்ற நடைமுறை அமலில் இருக்கிறது.

இந்நிலையில் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலமாக அந்த அபராதத்தை செலுத்த, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, டி.எஸ்.சிவஞானம் தலைமையில் கணினி குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சாலை விதிமீறலில் ஈடுபடுவோரின் வாகன எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு வாகன ஓட்டியின் செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்படுமாம். அதன் பிறகு, அந்த இணையதள முகவரியில் அபராதம் செலுத்த வேண்டுமாம்.

இந்த திட்டத்தை இன்று உச்ச நீதிமன்ற இ-கமிட்டி தலைவராக உள்ள நீதிபதி சந்திரசூட் வீடியோ கான்பரன்ஸில் தொடக்கி வைத்தார். ஏற்கனவே டெல்லியில் இது போன்ற விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் நீதிமன்றங்களை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் விர்ச்சுவல் நீதிமன்றம் தொடங்குவது இதுவே முதல்முறை ஆகும்.

Most Popular

“இனி பிரபலங்களை பார்த்து பிரமிக்காதீர்கள் “-ஊடகத்தில் உலாவரும் போலி பின்தொடர்பவர்கள் (followers )-டாலர்களில் விற்கப்படும் போலிக்கணக்குகள் ..

சமூக ஊடகத்தளமான ட்விட்டர் ,பேஸ் புக் ,இன்ஸ்டாக்ராமில் பிரபலங்களை லட்சக்கணக்கானவர்கள் பின்தொடர்வதை பார்த்து நாம் பிரமித்து போயிருக்கிறோம் .ஆனால் அதில் பல போலி கணக்குகள் என்றும் ,லட்சக்கணக்கான டாலர்களை கொட்டிக்கொடுத்து வாங்கப்பட்டவை என்றும்...

பொறியியல் கலந்தாய்வு: இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவச் சேர்க்கை, கலந்தாய்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று...

கொரோனா சிகிச்சை: உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு குணமடைந்தார்!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ குமரகுரு உடல் நலம் பெற்றதைத் தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க எம்.எல்.ஏ குமரகுருவுக்கு கொரோனாத் தொற்று ஏற்படவே சென்னை அப்பல்லோ...

‘அமேசான் பிரைம்,நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட எல்லா OTT தளங்களும் ஒரே இடத்தில்” ஜியோ டிவி பிளஸ் அறிமுகம்!

வர்த்தகத்துறைகளில் முன்னணி நிறுவனமாக திகழும் நிறுவனங்களுள் ஒன்று ஜியோ. இந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இந்த முறை கொரோனா பாதிப்பால் மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் பேசிய...
Open

ttn

Close