வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய டிராபிக் ராமசாமியின் வழக்கு தள்ளுபடி

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய டிராபிக் ராமசாமியின் வழக்கு தள்ளுபடி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றிக்கொள்ளவும், அதை முதல்வரின் அலுவலகமாக மாற்றவும் உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய டிராபிக் ராமசாமியின் வழக்கு தள்ளுபடி

இதனையடுத்து, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் அளித்த மனுவில், சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என்றும், அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் மனுவில் ராமசாமி குறிப்பிட்டிருந்தார். மேலும் வருமான வரித் துறையினர் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற முடியாது எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய டிராபிக் ராமசாமியின் வழக்கு தள்ளுபடி

டிராபிக் ராமசாமியின் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது என்பதால் இந்த வழக்கை ஏற்க முடியாது என்றும் மனு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர். அதனையடுத்து டிராபிக் ராமசாமி சார்பில் மனுவை திரும்பப்பெற அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.