ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

 

ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக கட்டப்பட்டுள்ளதால், அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

அவரது மனுவில், “கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்கு எந்தக் கட்டுமானங்களும் எழுப்பக் கூடாது. நினைவிடம் எழுப்ப மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் ஒப்புதலைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய தனது மனுவைப் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Madras High Court - Wikipedia

இந்த மனு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயல்லிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்குகளை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.