ஊரடங்கு தளர்வின் முதல் நாளில் போக்குவரத்து நெரிசல்… சென்னை திருந்துமா?

 

ஊரடங்கு தளர்வின் முதல் நாளில் போக்குவரத்து நெரிசல்… சென்னை திருந்துமா?

ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட முதல் நாளே சென்னையின் பல இடங்களில் மக்கள் கூட்டம் நெரிசல் அதிகரித்துள்ளது. சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் ஊரடங்கில் மீண்டும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டதால் ஊழியர்கள் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றனர். இதனால், சென்னையில் இன்று முக்கியமான சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் படிப்படியான தளர்வாக இல்லாமல் அதிகப்படியான தளர்வு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக மக்கள் வெளியே வந்தாக வேண்டிய நிலை உள்ளது. ஒரே நேரத்தில் அதிகப்படியான தளர்வு அளித்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்யாமல் தளர்வு வழங்கப்பட்டது போல உள்ளது. ஏற்கனவே சென்னை மக்கள் கொரோனா ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றனர் என்று திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. 100 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் ஊரடங்கை சமாளிக்க அரசு நியாயமான நிவாரணத்தை வழங்காத நிலையில் வெளியே வரும் மக்கள் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

ஊரடங்கு தளர்வின் முதல் நாளில் போக்குவரத்து நெரிசல்… சென்னை திருந்துமா?
கொரோனாவை அரசே தடுக்கும் என்று எதிர்பார்க்காமல், வெளியே செல்லும் மக்கள் தாங்களாக முன்வந்து மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பராமரித்தல், கைகளை அவ்வப்போது சானிடைசர் அல்லது சோப் போட்டு கழுவுதல் போன்றவற்றை பின்பற்றினால்தான் கொரோனாவைத் தடுக்க முடியும். இல்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மக்களாகப் பார்த்து திருந்தினால் மட்டுமே கொரேனாவை ஒழிக்க முடியும்!